கவுண்டமணி தன் வீட்டு நாய்க்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா, கேட்டா விழுந்து விழுந்து சிரிப்பீங்க
கவுண்டமணி
தமிழ் சினிமா இதுவரை எத்தனையோ காமெடி நடிகர்களை கடந்து வந்துள்ளது. ஆனால், அவர்கள் எல்லோரையும் விட என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர் கவுண்டமணி அவர்கள் தான்.
ஏனெனில் எந்த ஒரு படத்திலும் ஹீரோக்கு கூஜா தூக்குவது போல் இவர் நடிக்க மாட்டார், அது ரஜினியாக இருந்தாலும் சரி, கமலாக இருந்தாலும் சரி கலாய்த்து எடுத்துவிடுவார்.
அப்படித்தான் ஒருமுறை இயக்குனர் ஒருவர் கவுண்டமணி வீட்டிற்கு தன் திருமண பத்திரிகையை கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது கவுண்டமணி தன் வீட்டில் உள்ள நாயிக்கு பிஸ்கட் போட்டு கொண்டிருக்க, அந்த இயக்குனரும், இந்த நாய் பெயர் என்ன அண்ணே என்று கேட்டுள்ளார்.
அதற்கு கவுண்டமணி, ‘அதுக்கு என்ன பெயர் நாய் தான் அது பெயர், அதுக்கு ஒரு பெயரை வைத்து அதை நியாபத்தில் வைத்து எதுக்குப்பா’ என்று கூறியுள்ளார், இந்த நிகழ்வை அந்த சினிமா பிரபலம் ஒரு மேடையில் பகிர, ஒட்டு மொத்த ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.