ரஜினி குறித்து பரவிய சர்ச்சை!! என்னடா இது!! நொந்து போய் பேசிய வடிவேலு..

Rajinikanth Sundar C Vadivelu Gossip Today Coolie
By Jai May 25, 2026 04:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் வடிவேலு. பல சர்ச்சைகளில் சிக்கி வரும் வடிவேலு சமீபத்தில் தன்னை குறித்து சோசியல் மீடியாக்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து மனவருத்தத்துடன் பேசியிருக்கிறார்.

ரஜினி குறித்து பரவிய சர்ச்சை!! என்னடா இது!! நொந்து போய் பேசிய வடிவேலு.. | Vadivelu Breaks Silence On Rajinikanth Controversy

பல ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிய வடிவேலு, இப்போது பொய்யான தகவல்களின் இலக்காகி இருப்பது பேசுபொருளாகியுள்ளது. இயக்குநர் சுந்தர் சி அவர்களுடன் இணைந்து ஒரு பேட்டியொன்றில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார் வடிவேலு.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் வடிவேலு நடிக்க முடியவில்லை என்பதற்காக ரஜினிகாந்த் அவரை கடுமையாக விமர்சித்தார்.

ரஜினி குறித்து பரவிய சர்ச்சை!! என்னடா இது!! நொந்து போய் பேசிய வடிவேலு.. | Vadivelu Breaks Silence On Rajinikanth Controversy

இனிமேல் எந்த படத்திலும் வடிவேலு நடிக்கக்கூடாது என்று கூறினார், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற வகையில் ஒரு வீடியோ சமூகவலத்தளங்களில் பரவியது. அந்த வீடியோவை நானும் பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.

என்னடா இப்படி நடக்காத விஷயங்களையே நடந்தது போல் பேசுறாங்கன்னு பார்த்து நானே அதிர்ச்சியடைந்தேன். இப்போ என்ன உண்மை, என்ன பொய் என்பதே தெரியாத நிலை. எல்லாம் கட்டுக்கதை என்று வருத்தத்துடன் பேசினார் வடிவேலு.