நோயால் தவித்து உயிரிழந்த உடன்பிறந்த தம்பி, ஆனால் வடிவேலுக்கு உதவ மனம் வரவில்லை!..பகிர் கிளப்பும் நடிகர்
சமீபத்தில் நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பி ஜெகதீஸ்வரன், உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் வடிவேலுவின் உடன்பிறந்த தம்பி மரணம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் சில படங்களில் நடித்துள்ளார். வடிவேலு நினைத்திருந்தால் அவரது தம்பிக்கு பட வாய்ப்புகள் கொடுத்திருக்க முடியும்.
வடிவேலுவின் தம்பி 55 வயதில் கல்லீரல் செயல் இழந்து உயிரிழந்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சாதாரணமாகி விட்டது.
வடிவேலு முதலமைச்சர் ஸ்டாலின் அல்லது உதயநிதியிடம் உதவி கேட்டு இருந்தால், உதவி ஏதும் செய்து இருப்பார்கள். ஆனால் வடிவேலுக்கு தன்னுடைய தம்பிக்கு உதவி செய்ய மனம் வரவில்லை என்று பயில்வான் கூறியுள்ளார்.