ஆணவத்தில் விஜயகாந்தை அவமானப்படுத்திய வைகைப்புயல்!! வடிவேலுவின் கூலிங் கிளாஸ் மர்மம் இதுதான்..
தமிழ் சினிமாவி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு இடையில் சில பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து விலக்கப்பட்டு, அதன்பின் பல ஆண்டுகள் கழித்து மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தார். தற்போது இணையத்தில் வடிவேலுவை பற்றி விமர்சித்து பேசுவது தான் பேசு பொருளாக இருந்து வருகிறது. அதற்கு காரணம், தன்னை வளர்த்துவிட்ட கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு கூட வராமல் இருந்தது தான்.
இறுதி சடங்கிற்கு வராத வடிவேலுவை பல பிரபலங்கள் கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பத்திரிக்கையாளர் அந்தணன் வடிவேலு கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு வெளியில் வரக்காரணம் என்ன என்ற உண்மையை பகிர்ந்திருக்கிறார். வடிவேலுவுக்கு விஜயகாந்திற்கும் பகை ஆரம்பித்ததில் இருந்து இருவரும் சந்திக்காமல் இருந்து வந்தனர்.
மதுரைக்கு அடிக்கடி செல்வதால் அவரை விஜயகாந்தை பார்க்க நேரில் என்பதற்காக என்ன செய்வது என்று உடன் இருந்தவர்களிடம் கேட்டிருக்கிறார் வைகைப்புயல். அதற்கு அவரது நண்பர்கள், கூலிங் கிளாஸ் போட்டுக்கொள்ளுங்கள் என்று அதை போட்டுக்கொண்டால் எதிரில் பார்ப்பது தெரியாது என்று கூறியதால் தான் வடிவேலு அன்றிலிருந்து கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டாராம்.
அதன்பின் வடிவேலு எதற்காக பயந்தாரோ அது நடந்தது. 2011ல் வடிவேலு, விஜயகாந்தை தாறுமாறாக திட்டுகிறார், பேச்சுவார்த்தை இல்லை. அந்த சமயத்தில் சென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்தை சந்தித்ததும், பார்த்தும் பார்க்காத மாதிரி சென்றிருக்கிறார் வடிவேலு. ஆனால் விஜயகாந்த் உடனே, என்ன வடிவேலு நல்லா இருக்கியா என்று கூறியதும் ஷாக்காகிவிட்டாராம். நன்றாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு அப்படியே வடிவேலு சென்றிருக்கிறார்.
சில தினங்களுக்கு பின் இருவரின் காரும் காவேரி தெருவில் இருவரின் காரும் எதிரெதிரே சென்றுள்ளது. அதை பார்த்த வடிவேலு பயந்திருக்கிறார். விஜயகாந்த் தன் காரை பின்னாடி எடுக்கச்சொல்லி வடிவேலுவுக்கு வழி விட்டிருக்கிறார் என அந்தணன் தெரிவித்திருக்கிறார் . இப்படியொரு மனசு இருக்கும் விஜயகாந்த், தன்னை எதிர்த்தவரையும் நேசிப்பவர் என்றும் வடிவேலுவின் வைராக்கியம் எப்பேற்பட்டது என்றும் தெரிவிக்கிறேன் எனவும் கூறியிருக்கிறார்.