தனக்குத்தானே குழிதோண்டிய வடிவேலு!! ஆணவத்தை வளர்த்தவருக்கு செய்த துரோகம்..
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், வைகைப்புயல் என்ற பெயரோடு பல லட்சக்கணக்கான ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தவர் நடிகர் வடிவேலு. பல கஷ்டங்களை தாண்டி வந்த வடிவேலு சில ஆண்டுகளுக்கு முன் பல பிரச்சனைகளை சந்தித்து சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
லைக்கா நிறுவனம், சங்கர், விஜயகாந்த் போன்றவர்களுடன் சண்டைப்போட்டு பேரையும் கெடுத்துக்கொண்டார். அதிலும் தன்னை உயர்த்திய விஜயகாந்த் அவர்களை ஒருமையில் கீழ்தரமாக வாடா போடா என்றும் குடிகாரன் என்றும் விமர்சித்து பேசி வந்தார்.
சில படங்களில் வடிவேலு வேண்டும்மென்றே சில காட்சிகளை அவமானப்படுத்தும் வண்ணம் வைத்து நடித்தார் என்றும் கூறப்பட்டது. வடிவேலு குணத்தை அறிந்து விஜயகாந்த் அமைதியாக இருந்தார்.
ஆனால் ஓவராக சென்றதால் சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சி என்ற இடத்தினை பிடித்த விஜயகாந்த், வடிவேலுவுக்கு ஒரு ஸ்கெட்ச் போட்டு சினிமாவில் நடிக்கவிடாமல் செய்தார். இதன்பின் தான் வடிவேலு அமைதியாக தன்னுடைய இடத்தை பிடிக்க கெஞ்சி படங்களில் கமிட்டாகினார்.
அப்படியும் அமைதியாக இல்லாமல் தன்னுடன் நடித்த பழைய காமெடி நடிகர்களை ஒதுக்கியும் தன்னை பகைத்தவர்களை சீண்டும் வகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பாடலில் சில வரிகளை வைத்து பழித்தீர்த்துக்கொண்டார் வடிவேலு.
அதனால் தான் என்னவோ படம் படுதோல்வியை கொடுத்தது என்று விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.