அதிக மின் கட்டணம் விவகாரம்!! TANGEDCO-ஆல் எஸ்கேப் ஆன நடிகை வைஷாலி..
வைஷாலி
சீரியல் நடிகை வைஷாலி, தமிழக முதலமைச்சர் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அறிவித்தபோது அதை மகிழ்ச்சியுடன் கூடிய வீடியோவை வெளியிட்டிருந்தார். சமீபத்தில் ஒரு வீடியோ இன்றினை வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியுள்ளார். அதில், இரண்டு மூன்று மாதங்களாக மின்சாரக் கட்டணம் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
எனக்கும் இதே நிலைமைதான். 200 யூனிட் இலவச மின்சாரம் என்பதை எடுத்துவிட்டு, முன்பு இருந்தபடியே கணக்கீடு செய்யலாம். இதுபோன்ற சம்பவங்களால் தவெக ஆட்சியின் மீதான நம்பிக்கை குறையும் என்று கூறியிருந்தார்.

TANGEDCO
அவரது வீடியோ டிரெண்ட்டாகி வைரலான நிலையில், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த காணோலியிலுள்ள மின் நுகர்வோர் தனக்கும் மற்ற பலருக்கும் அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே மின் வாரியம் மாநிலம் முழுவதும் உள்ள 3.74 லட்சம் மின் இணைப்புகளை சிறப்பு ஆய்வு செய்ய எடுத்துக்கொண்டாது. இதில் நேற்று வரை 3.43 லட்சம் மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இதில், 0.75 சதவீதம் மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மின் கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. என விளக்கத்தை கொடுத்துள்ளது.
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.