தாய் தந்தைக்கு விஜய் கூட செய்யாத மரியாதையை, மூன்றாவது மனிதனாக செய்த வம்சி..
சமீபத்தில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் மற்றும் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இருவருமே கலந்துகொண்டனர். இந்த விழாவிற்கு என்ட்ரி கொடுத்த விஜய் தனது தாய்யிடம் மிகவும் சகஜமாக வெறும் கை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.
இதை கவனித்த நெட்டிசன்கள் பலரும், 'அவர் உங்களுடைய தாய் அவருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இவ்வளவு தானா, அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் கூட வாங்க மாடீர்களா' என்று விஜய்யை கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். இது பெரும் சர்ச்சையாக சமூக வலைத்தளத்தில் இருந்தது.
இந்நிலையில், விஜய் கூட தனது தாய் தந்தைக்கு செய்யாத விஷயத்தை அப்படத்தின் இயக்குனர் வம்சி செய்துள்ளார். ஆம், இந்த விழாவிற்கு என்ட்ரி கொடுத்த இயக்குனர் வம்சி உடனடியாக வந்து விஜய்யின் தாய் மற்றும் தந்தை இருவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


