காசுக்காக படத்தில் பெயரை போட்ட இயக்குனர்! விக்ரமால் புலம்பித்தள்ளும் சின்னத்திரை நயன்தாரா!

vikram vanibhojan dhruvvikram mahaan simra
By Edward Feb 16, 2022 09:53 AM GMT
Report

சின்னத்திரை நயன் தாரா என்று கூப்பிடும் அளவிற்கு மக்கள் மனதை ஈர்த்தவர் நடிகை வாணி போஜன். செய்திவாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக நடித்து பிரபலமானார். பின் வெள்ளித்திரையில் சிறு கதாபாத்திரமாக ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழவைத்துள்ளது.

இந்நிலையில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் மகான். அப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சில காட்சிகளில் நடித்திருப்பார். அதற்காக சம்பளம் வாங்கி கால்ஷீட் கொடுத்து நடித்தும் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரின் காட்சிகள் ஒன்று கூட திரையிடப்படவில்லை. இதனால் இயக்குனர் மீதும் விக்ரம் மீதும் கடும்கோபத்தில் இருந்து வருகிறாராம்.படத்தில் நான் ஒன்பது நாட்கள் நடித்தேன்.

அதில் விக்ரம் சாருடன் முதல் பாதி ஏற்கனவே எடுத்து விட்டோம். ஆனால் இரண்டாம் பாதி எடுக்கும் போது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் எங்களால் ஷூட்டிங் செய்ய முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் என்னுடைய கேரக்டர் இரண்டு பாதிக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது.

இதுகுறித்து டைரக்டர் என்னிடம் கேட்ட போது எடிட் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள், எனக்கு ஒரு திரைப்படத்தில் நடித்த அனுபவம் தான் முக்கியம், எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என தெரிவித்துள்ளார் வாணி போஜன்.

இரு நடிகைகள் நடித்த காட்சிகள் இல்லாவிட்டாலும் நடிகை சிம்ரன் காட்சிகள் மட்டும் அமைந்துள்ளதே என்று சந்தோஷப்பட்டுள்ளார்களாம்.