எப்போ கல்யாணம் மேடம்... ஒரே கேள்வியால் கோபத்தில் முகம் சுளித்த நடிகை வாணி போஜன்..
வாணி போஜன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். தற்போது வாணி போஜன் சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.
செங்கமலம், சட்னி சாம்பார் உள்ளிட்ட ஓடிடி தள படங்களில் வாணி போஜன் நடிப்பில் வெளியாகியது. தற்போது ஆர்யன், கேசினோ, பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
எப்போ கல்யாணம்
இந்நிலையில், நகைக்கடைக்கு சென்று புது மாடலை அறிமுகம் செய்து வைக்க சென்றிருக்கிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய வாணி போஜனிடம், உங்களுக்கு எப்போது திருமணம் என ஒருவர் கேட்டுள்ளார்.
இதனால் முகம் சுளித்தபடி முகத்தை மாற்றிய வாணி போஜன், ச்ஸோ என்று கோபமாக பார்த்து சென்றார். பக்கத்தில் இருந்தவர்கள் பர்சனல் கேள்வி கேட்காதீர்கள் என்று செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.