ரவீந்தர் என்னைவிட பெரிய லூசு..சேதுபதியும் ஓடிட்டாருன்னா!! வனிதா விஜயகுமார்..
வனிதா விஜயகுமார்
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது வெறித்தனமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரு வாரங்களில் ரவீந்தர் மற்றும் அர்னவ் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினர்.
தற்போது வெளியில் வந்த ரவீந்தருடன் நடிகை வனிதா விஜயகுமார் நேரடியாக நடத்திய உரையாடலில் பிக்பாஸ் பற்றியும் சொந்த பர்சனல் காதல் பற்றியும் பகிர்ந்துள்ளார்.
அதில், வனிதா விஜயகுமார் உள்ளே செல்ல வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்களே என்ற கேள்விக்கு, சேதுபதியாவது ஷோவை நடத்தட்டுமெ அவரும் ஓடிப் போயிட்டாருன்னா, அப்புறம் பிக் பாஸ் ஷோவை நடத்துறது யாரு என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பெரிய லூசு ரவீந்தர்
மேலும், தொகுப்பாளியை விட நான் ரொம்ப பெரிய லூசு என்றும் என்னைவிட பெரிய லூசு ரவீந்தர் என்றும் வனிதா விஜயகுமார் சிரித்தபடி கிண்டலடித்தார்.
இதற்கு ரவீந்தர், வனிதா விஜயகுமார் அடுத்த படம் எப்போ என்றும் அடுத்த ரிலீஸ் எப்போ என்றும் போட்டு வாங்க, காதல் இருக்கு என்று வனிதாவும் உளறி இருக்கிறார்.
உடனடியாக வனிதா கன்னம் சிவக்குது யாரு அந்த நபர் என கேட்ட ரவீந்தருக்கு, அதெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் ஆள் இருப்பதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் ராபர்ட் மாஸ்டருடன் மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் படத்தின் பிரமோஷனில் போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பை வனிதா ஏற்படுத்தியதை தான் வனிதா காதல் இருக்கு என்று கூறுகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.