வெளிநாட்டுக்கு சென்று ஏர்போட்டில் மாட்டிக்கொண்ட வனிதா விஜயகுமார்! இப்படி எல்லாமா நடக்கும்

By Parthiban.A Dec 09, 2021 05:30 PM GMT
Report

நடிகை வனிதா விஜயகுமார் என்றாலே எப்போதும் அவரை சுற்றி இருந்து கொண்டிருக்கும் சர்ச்சைகள் தான் நினைவுக்கு வரும். பிக் பாஸ் தொடங்கி திருமணம் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் அவர்.

தற்போது அவர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். பாங்காக் விமான நிலையத்தில் அவர் சென்று இறங்கிய பிறகு visa on arrival கிடைத்தாலும் அதை பிரிண்ட் அவுட் எடுக்க முடியாவில்லை என மூன்று மணி நேரம் ஏர்போர்ட்டில் நின்றிருக்கிறார்.

SriLankan Airlines அதிகாரி வனிதாவிடம் ரூடாக பேசி இருக்கிறார். இன்னொரு டிக்கெட் வாங்கி இந்தியா சென்று பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு வாங்க என கூறி இருக்கிறார்.

பல மணி நேரம் கழித்து தான் அந்த பிரச்சனை தீர்ந்து இருக்கிறது. அதன் பிறகு பாஸ்போர்ட் சீல் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.