வாரிசு பிரீமியர் ஷோவில் கழிவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன்!! கடும்கோபத்தில் விஜய் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் வாரிசு படம் ரிலீஸாகவுள்ளது.
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக பல திரையரங்குகளில் நாளை காலை 4 மணியளவில் இருந்து ரிலீஸாகிறது.
வாரிசு படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று இரவு 8.30 மணிக்கு சத்யம் தியேட்டரில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் அனைத்து படங்களுக்கும் படுமோசமான வார்த்தையில் விமர்சனத்தை கூறி வரும் ப்ளூ சட்டை மாறனும் வாரிசு பிரீமியர் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
தியேட்டரில் அவர் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் விஜய் ரசிகர்கள் பார்த்துவிட்டு கடும் கோபத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
ஏற்கனவே விஜய் 1 கோடி அளவில் வாரிசு விமர்சனத்திற்கு பணம் வாங்கியதாக செய்திகள் பரவிய நிலையில் நாளை ப்ளூ சட்டை மாறன் எப்படி விமர்சனம் சொல்லுவார் என்று பலர் எதிர்பார்த்தும் வருகிறார்கள்.
