விஜய் பெயரில் இப்படியொரு கொள்ளை அடிக்கும் தியேட்டர்காரர்கள்!! அஜித், விஜய் புலம்பும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக இருந்து வருபவர்கள் அஜித், விஜய். இருவரின் நடிப்பில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் நாளை வெளியாகவுள்ளது.
துணிவு படம் அதிகாலை 1 மணிக்கு முதல் காட்சியும் வாரிசு படம் அதிகாலை 4 மணி காட்சிகளும் ஆரம்பிக்கவுள்ளன. படத்தின் புக்கில் ஆரம்பித்த சில நிமிடத்திலேயே ஆன்லைன் டிக்கெட்டுக்கள் விற்பனையாகியுள்ளது.
இப்படியிருக்கும் நிலையில் சில தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட்டின் விலை 1000 ரூபாய்க்கும் மேல் வாங்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அஜித், விஜய் ரசிகர்கள் அப்படியிருந்தும் பணம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கிச்செல்கின்றனர். இதுகுறித்து, சினிமா விமர்சகர் பிஸ்மி மற்றும் அந்தணன், டிக்கெட் விலை குறித்து விமர்சித்துள்ளனர்.
தன் ரசிகர்கள் மேல் அதிக விருப்பம் கொண்ட விஜய். தன் பெயரில் இப்படியொரு கொள்ளை நடப்பது என்று பேசியிருக்கலாமே என்று கூறியுள்ளனர்.