கோட் படத்தின் நெகட்டிவ் விமர்சனம்!! வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்..
இயக்குநர் வெங்கட் பிரபு
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி வெளியாகியது கோட் திரைப்படம். படம் வெளியாகி கிட்டத்தட்ட 300 கோடி வசூலை எட்டியநிலையில், ஒருசிலர் கலவையான விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள்.
நெகட்டிவ் விமர்சனம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு, எக்ஸ் தளப்பக்கத்தில் ஸ்பேஸ் மூலம் ரசிகர்களிடையே உரையாடினார். அதில், என்னை பொறுத்துவரை கமர்ஷியல் படத்துக்கான விமர்சனத்தை அவர்கள் பண்ணவில்லை. ஜானர் தொடர்பான விமர்சனமும் யாரும் பண்ணவில்லை.
நெகட்டிவ் விமர்சனம்
எதுக்கு பாடல், எதுக்கு பழைய படத்தின் ரெஃபரன்ஸ் என்றுதான் நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனல படத்தின் கதையை பற்றி விமர்சனம் குறைவாகத்தான் இருக்கிறது.
கேமிரோ இருக்கு, ரெஃபரன்ஸ் - ரெஃபரன்ஸாக இருக்கிறது என்று விமர்சிப்பதை பற்றி எனக்கு கவலை கிடையாது, அதை வேண்டுமென்றே தான் படத்தில் வைத்தேன். எந்தவொரு பெரிய ஸ்டார் படத்திலும் மற்ற நடிகர்களின் ரெஃபரன்ஸ் கிடையாது. கோட் படத்தில் மட்டும் தான் இருக்கிறது.
இதுபோல் மற்ற நடிகர்கள் ஒப்புக்கொள்வார்களா என்று தெரியாது. விஜய் நினைத்திருந்தால் அதை கட் செய்ய என்னிடம் கூறியிருக்க முடியும். ஆனால் எல்லா ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடவேண்டும் என்று அவர் நினைத்தார்.
இந்தமாதிரி எந்த நடிகர்களின் படங்களிலும் செய்யமுடியாது. ரெஃபரன்ஸை தாண்டி படத்தில் என்ன கடஹி இருக்கிறது என்று விமர்சனம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விமர்சனம் செய்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பம், அதை ரொம்ப ஆராயமுடியாது என்றும் வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.