வேட்டையன் படத்தின் மூலம் கிடைத்த லாபம்.. எவ்வளவு தெரியுமா
Rajinikanth
Vettaiyan
By Kathick
ரஜினிகாந்த் - TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான திரைப்படம் வேட்டையன். இப்படம் கடந்த 10ஆம் தேதி வெளிவந்த நிலையில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இந்த நிலையில், வேட்டையன் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வேட்டையன் படத்தின் பட்ஜெட் ரூ. 225 ஆகுமாம்.
இதில் ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் பிசினஸ் மூலம் ரூ. 223 கோடி வரை வேட்டையன் வசூல் செய்துள்ளது. ரிலீஸுக்கு பின் இப்படம் உலகளவில் செய்த வசூலின் அடிப்படையில் ரூ. 90 கோடி வரை தயாரிப்பாளருக்கு நிகர லாபம் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.