திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் விடாமுயற்சி படம்.. அதற்குள் டிவியில் ஒளிபரப்பா
Ajith Kumar
Sun TV
VidaaMuyarchi
By Kathick
அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவரை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
இவர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதுவரை உலகளவில் ரூ. 131 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திரையரங்கில் பட்டையை கிளப்பி வரும் விடாமுயற்சி படத்தின் டிவி ஒளிபரப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
இப்படியிருக்க வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தான்டு அன்று விடாமுயற்சி திரைப்படத்தை சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்போவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.