அந்த சமயத்தில் நயன் தாரா என்னிடம் அப்படி தான் இருப்பார்!! கணவர் விக்னேஷ் சிவன் கூறிய உண்மை..
டாப் நடிகையாக தென்னிந்திய சினிமாவில் ஆக்கிரமித்து வரும் நடிகை நயன் தாரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் காலெடி எடுத்து வைத்திருக்கிறார். இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் நடிப்பை தாண்டி பல தொழில்களை செய்து வருகிறார்.
சமீபத்தில் 9 ஸ்கின் என்ற நப்கின் பிராண்ட்டை துவங்கினார். அதற்காக விளம்பரங்களையும் செய்து வரும் நயன் தாரா கல்லூரி ஒன்றில் கூட நாப்கின் பயன்பாடு பற்றி பேசியிருந்தார்.
அதேபோல் நயன் தாராவின் கணவர் பேசுகையில், முன்பெல்லாம் என் அம்மா, அண்ணியும் பயன்படுத்திய போது நானே வாங்கி கொடுத்திருக்கிறேன். ஆனால் அதனுள் என்ன இருக்கிறது, எப்படி இருக்கும் என்று தெரியாது. கையில் ஏதாவது கிடைத்தால் அதை விளம்பரம் செய்பவர் நயன் தாரா கிடையாது.
8 மாதங்கள் அவர் அதை பயன்படுத்தினார். ஒரு விசயத்தை பற்றி பேச ஆரம்பித்தால் அது அவருடைய இதயத்தில் இருந்து தெளிந்த பின் தான் வெளியில் பேசுவார். அதேபோல் இதை என் அக்கா மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இதை கொடுத்தப்பின் அதை பயன்படுத்திவிட்டு நல்ல கருத்துக்களை கூறினார்கள்.
அதன்பின் தான் 9 ஸ்கின் சந்தைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் மாதவ்விடா சுழற்சி நடபெறும் சபயத்தில் பெண்களின் மனநிலை மாறுவது பொதுவானது. எனக்கு அதைப்பற்றிய யோசனை பெரிதாக எதுவும் இல்லை.
அந்த மாதிரியான சமயத்தில் என் மனைவி கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருப்பார் என்றும் ஓரிரு வாரங்கள் கழித்து சாதாரணமாகிவிடுவார் என்றும் கூறியிருக்கிறார் நயன் தாராவின் காணவர் விக்னேஷ் சிவன்.