LIC என்ற தலைப்புக்கு ரூ. 112 கோடி.. விக்னேஷ் சிவன் LiK குறித்து ஓபன் டாக்..

Vignesh Shivan Love Insurance Kompany
By Kathick Apr 15, 2026 03:30 AM GMT
Report

பிரதீப் ரங்கநாதன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார். லவ் டுடே, டிராகன் மற்றும் Dude என தொடர்ந்து மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து, வசூல் நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் பிரதீப் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் LiK.

இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். கடந்த வாரம் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் வசூலிலும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LIC என்ற தலைப்புக்கு ரூ. 112 கோடி.. விக்னேஷ் சிவன் LiK குறித்து ஓபன் டாக்.. | Vignesh Shivan About Why Lic Title Change To Lik

LIK படத்திற்கு முதலில் LIC என்று தான் இயக்குநர் விக்னேஷ் சிவன் டைட்டில் வைத்து இருந்தார். ஆனால் அதற்கு LIC நிறுவனம் Copyrights கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு தான் டைட்டிலை Love Insurance Kompany (LIK) என மாற்றினார்கள். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் பேசியுள்ளார்.

இதில், "LIC என்ற டைட்டிலை பயன்படுத்த ரூ. 112 கோடி கேட்டார்கள். என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. அதனால் பேக்அப் ஆக LIP, LIT, LIK, LIF போன்ற தலைப்புகளை வைத்திருந்தேன். அதில் இருந்துதான் LIK என்ற டைட்டிலை பயன்படுத்தினேன்" என கூறி இருக்கிறார். 

LIC என்ற தலைப்புக்கு ரூ. 112 கோடி.. விக்னேஷ் சிவன் LiK குறித்து ஓபன் டாக்.. | Vignesh Shivan About Why Lic Title Change To Lik