கைநழுவிய அஜித்62 பட வாய்ப்பு!! விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி..
விடாமுயற்சி
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இன்று பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது விடாமுயற்சி படம்.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலீஸாகியுள்ள விடாமுயற்சி படத்தின் அனைவரும் பார்த்து கொண்டாடி வரும் நிலையில், படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
விக்னேஷ் சிவன் பதிவு
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு பதிவு போட்டிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்து டிரெண்ட்டாகி வருகிறது. சில நேரங்களில், நீங்க வருத்தப்படுவதை நிறுத்தினாலே போதும் என்ன மேஜிக்கை செய்ய வேண்டுமோ இந்த யூனிவர்ஸே அதை உங்களுக்காக நிகழ்த்திவிடும் என்ற பதிவினை போட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
ஏற்கனவே அஜித்62 படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில், கதையில் சில மாற்றம் சொல்லியும் மாற்றாமல் இருந்ததால் அவரை அஜித் வேண்டாம் என்று கூறி ஒதுக்கிவிட்டார்.
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் வேறொரு படத்தினை இயக்க ஆரம்பித்துவிட்டார். இதனை மனதில் வைத்தும் விடாமுயற்சி படத்தின் விமர்சனத்தை வைத்தும் தான் விக்னேஷ் சிவன் இப்படியான ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.