25 கோடிக்கு ஆப்பு வைத்த அஜித், விஜய்? கல்யாணத்தால் நம்பி ஏமாந்து போன நயன்தாரா-விக்னேஷ் சிவன்
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா தான் ஆசையாய் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் இருக்கும் ரெசார்ட்டில் திருமணம் செய்து கொண்டார்.
முக்கிய நட்சத்திரங்களுக்கு மட்டும் திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. திருமணத்தை வைத்து காசு சம்பாதிக்கலாம் என்று திட்டம்போட்ட நயன் - விக்கி நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் திருமண நிகழ்வை ஒளிப்பரப்ப 25 கோடிக்கும் பேச்சுவார்த்தை நடத்த கடும் பாதுகாப்புடன் நடைபெற்றது.

இதற்காக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். ஒரு மாதங்களில் ஒருசில முக்கியப்புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு விட்டார் இதனை நெட்பிளிக்ஸ் நிறுவனம் விரும்பாததால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்கியுள்ளதாம்.
திருமணத்திற்காக நயன் தாரா - விக்னேஷ் சிவன் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்றும் ஐந்து நட்சத்திர ஓட்டலின் அறைகளை முன்பதிவு செய்தும், மேக்கப், சாப்பாடு, அலங்காரம், பாதுகாப்பு என அனைத்தினையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் பார்த்துக்கொண்டதாக தெரிகிறது.
விக்னேஷ் சிவன் ஒரு மாதமாகிய நிலையில் திருமண புகைப்படங்களை வெளியிட்ட அதன் சுவாரஸ்யத்தை குறைத்துவிடும் என்பதற்காகவும் முக்கிய நட்சத்திரங்கள் வந்தாலும் மார்க்கெட்டில் அதிக கவனம் பெரும் அஜித், விஜய் திருமணத்திற்கு வராததும் தான் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பேச்சுக்கள் கோலிவுட்டில் அடிபடிகிறது.

இதனால் மற்ற ஓடிடி நிறுவனத்திடம் பேசியும் பயனில்லாமல் போனதால் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் என்ன செய்வது என்று தெரியாமல் கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்களாம். இதனால் தான் விக்னேஷ் சிவன் சில கருத்துக்களை போட்டு வருகிறாராம்.