நயன்தாராவிடம் வரதட்சணை வாங்குவாரா விக்னேஷ் சிவன்?
தற்போது கோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நயன்தாரா. ஒரு படத்திற்கு பல கோடி சம்பளமாக பெறுகிறார் அவர்.
நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது என சொல்லப்படுகிறது. ஆனால் சமீபத்தில் நயன்தாரா நெற்றியில் குங்குமத்துடன் இருந்த வீடியோ வைரல் ஆனது. அதனால் அவர்கள் திருமணம் ஏற்கனவே முடிந்துவிட்டதோ என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் வரதட்சணை பற்றி விக்னேஷ் சிவன் போட்ட ஒரு பதிவு வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் ஒரு கல்லூரி புத்தகத்தில் வரதட்சணை பற்றி குறிப்பிட்டு.. அது இருப்பதால் தான் அழகில்லாத பெண்களுக்கு கூட நல்ல வரன் கிடைக்கிறது என குறிப்பிட்டு இருந்தது. அது இணையத்தில் பரவி சர்ச்சையான நிலையில் அதை பகிர்ந்து 'அடேங்கப்பா, க்ளாப்ஸ் க்ளாப்ஸ்' என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டு உள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் வரதட்சணை வாங்குவாரா? என கேட்டு வருகின்றனர்.