விக்னேஷ் சிவனுடன் திருமணமாகி இரட்டை குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து!! முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வரும் செய்தி நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளில் விவகாரம் தான். 7 வருட காதலுக்கு பின் ஜூன் மாதம் நயன் தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கரம் பிடித்தார்.
திருமணமாகி 4 மாதங்களுக்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார் நயன் தாரா. இதனால் பல சட்டச்சிக்கல் பிரச்சனைகளை கடந்து தற்போது குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள் நயன் - விக்கி.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன் தாரா இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் நயன் தாரா கணவர் விக்னேஷ் சிவன் கணக்கை அன்பாஃலோ செய்துவிட்டதால் இருவருக்கும் பிரச்சனை என்ற வதந்திகள் பரவியது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் கணவர் அக்கவுண்ட்-ஐ ஃபாலோ செய்திருக்கிறார் நயன் தாரா. இன்ஸ்கிராமில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோலாறு காரணமாகவே நயன் தாராவின் பக்கத்தில் சிலரின் ஃபாலோயர்களின் பெயர் காண்பிக்கப்படவில்லை என்று கூறி வருகிறார்கள்.