தயவு செஞ்சு ஃப்ரீயா விடுங்க, சிந்திக்க நேரம் கொடுங்க..தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேட்டி
நடிகரும் பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 16 தான். தற்போது போலீசார் விஜய் ஆண்டனி குடும்பத்தாரையும் மீராவவின் நண்பர்களையும் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னதாக ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு தற்கொலை எண்ணங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் , தற்கொலை தொடர்பான எண்ணங்கள் பல பேருக்கு வந்திருக்கிறது. இது பற்றி நான் கேள்விபட்டு இருக்கிறேன். சிலருக்கு பணப்பிரச்சனையால் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
சிலர் யார் மீதாவது நம்பிக்கை வைத்து ஏமாற்றப்படும் போது அந்த மாதிரி நடக்கிறது. பள்ளியில் குழந்தைகளுக்கு படிப்பினால் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக தற்கொலைகள் நடைபெறுகிறது. குழந்தைகளை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க. நான் முழுக்க படிப்பதனால் சிந்திக்க நேரமில்லாமல் போய் விடுகிறது என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.