விஜய்யின் சொத்து பட்டியல்!! சங்கீதா சொன்னது உண்மை தானோ? என சந்தேகிக்கும் நெட்டிசன்கள்..
தமிழக அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகர் விஜய் குறித்து பல விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறி வருகிறது. அரசியல் மட்டுமில்லாமல், தனிப்பட்ட வாழ்க்கை, அதுவும் மனைவி சங்கீதா உடன் ஏற்பட்டுள்ள விவாகரத்து பிரச்சனைகளும் பேசுபொருளாகி வருகிறது.

விஜய் வேட்புமனு தாக்கலில்
தேர்தல் வேட்புமனு தாக்கலில், தன்னுடய சொத்து விவரங்களை வெளிப்படையாக அளித்திருந்தார் நடிகர் விஜய், தன்னிடம் சுமார் 400 கோடி ரூபாக்கும் மேல் அசையும் சொத்துக்கள், 100 கோடி ரூபாய்க்கும் மேலான அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
மனைவி சங்கீதா பெயரில் இருக்கும் சொத்துக்கள் பற்றியும் சில விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
வருமான விவரங்கள்
அந்த அறிக்கையின்படி சங்கீதா பெயரில் தங்கம், வைரம் போன்ற நகைகள், சில வருமான விவரங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக அவரிடம் சுமார் 3 கிலோக்கும் மேற்பட்ட தங்கம், 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் இருப்பதாகவும் நிலம், வீடு, பெரிய அளவிலான முதலீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் சங்கீதா பெயரில் இல்லை என்பது குறிப்பட்டுள்ளது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சங்கீதா தன்னுடைய விவாகரத்து மனுவில், பொருளாதார ரீதியாக சிரமத்தில் உள்ளேன் என்று குறிப்பிட்டதாக தகவல் வெளியாஅது. அதேசமயம், விஜய்யின் சொத்து அறிக்கையில் மனைவி பெயரில் பெரிய அளவிலான சொத்துக்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அப்படி என்றால் விஜய் உண்மையிலேயே குடும்பத்திற்காக சொத்துக்கள் வாங்கவில்லை என்று தானே அர்த்தம் என்றும், சங்கீதா கூறியது உண்மைதானோ என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது.