பெற்றெடுத்து அம்மாவிற்கு இவ்வளவு தான் மரியாதையா.. ஏங்கி தவிக்கும் ஷோபா சந்திரசேகர்

Vijay Varisu S. A. Chandrasekhar
By Kathick Dec 26, 2022 02:15 AM GMT
Report

நேற்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். விஜய்யின் தந்தையும், தாயும் இதில் கலந்துகொண்டு தங்களது மகனின் படம் வெற்றிபெறும் என வாழ்த்தினார்கள்.

இந்நிலையில், நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவின் அரங்கத்திற்குள் வரும்பொழுது அனைவருக்கும் சிம்பிளாக கைகொடுத்துவிட்டு வந்தார். அதேபோல் தான் தனது பெற்றோர்களிடமும் நடந்துகொண்டார். இந்த வீடியோவில் கூட தனது மகன் தன்னிடம் பேசாமல் செல்கிறாரே என்று ஷோபா சந்திரசேகர் ஏங்கி பார்க்கும் காட்சி இருந்தது.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், பெத்தெடுத்த அம்மாவிற்கு இவ்வளவு தான் மரியாதையா, தன்னை வளர்த்து விட்டர்களுக்கு விஜய் இப்படி தான் மரியாதை கொடுப்பாரா. பெற்றெடுத்து ஆளாக்கிய அம்மா காலில் விழுந்து ஆசி வாங்காமல், நின்று ரெண்டு வார்த்தை கூட பேசாமல் போகிறாரே என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.