விஜய்யால் குழப்பமா? புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பல காமெடி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்து வரும் இச்சூழலில் படத்தில் அப்டேட் என்ன என்று ரசிகர்கள் சில தினங்களாக கூறி ஏங்கி வந்தனர்.
அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஏப்ரல் 2ஆம்தேதி படத்தில் டிரைலர் வெளியாகும் என்ற செய்தியை அறிவித்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரசிகர்களை குஷிப்படுத்த படத்தின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறது.
அப்படி நேற்று வெளியிட்டு புகைப்படத்தையும் ரிலீஸ் தேதி அறிவிப்பில் பயன்படுத்திய புகைப்படத்தையும் பார்த்து ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இரு படத்தினை வைத்து நான் ஒரே குழப்பத்துல இருக்க மதர் என்ற மீம்ஸ் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து கொண்டு புலம்பி வருகிறார்கள்.