அவர் இல்லைன்னா என் வாழ்க்கை சூனியமாக போய் இருக்கும்!! ஒப்பனாக பேசிய விஜய் அப்பா..
தமிழ் சினிமாவில் 80 காலக்கட்டத்தில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். அவர் இயக்கத்தில் கிட்டத்தட்ட 7 படங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளார்.
பெற்றொரிடம் பிரச்சனை
விஜய்யின் இந்த உச்சக்கட்ட வெற்றிக்கு முக்கிய காரணமாக அவரது தந்தை எஸ் ஏ சி-யும் ஆறுதலாக அவரது தாய் ஷோபாவும் இருந்து வந்துள்ளனர். சமீபகாலமாக தன் தாய் தந்தையை விஜய் கைவிட்டுவிட்டார் என்றும் பெற்றோர்களுக்கும் விஜய்க்கும் இடையில் பிரச்சனை என்றும் கூறப்பட்டு விமர்சிக்கப்பட்டும் வருகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜய்யின் தாய் தந்தை எங்கும் தன் மகனை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் தனியார் இணையதள பேட்டியில் விஜய் மற்றும் அவரது மனைவி ஷோபாவை பற்றி எஸ் ஏ சி அவர்கள் கலந்து பேசியுள்ளார்.
ஷோபா இப்படிப்பட்டவள்
எனக்கு சினிமாவில் பெரிய நண்பர்கள் கிடையாது. எனக்கு நண்பன், மகன் எல்லாத்துக்கும் முதலுமாய் இருப்பது விஜய் தான் என்று கூறியுள்ளார். மேலும் மனைவி ஷோபா இல்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று விஜே அர்ச்சனா கேட்டார். அதற்கு எஸ் ஏ சி, அவள் இல்லை என்றால் என் வாழ்க்கை சூனியமாக போயிருக்கும் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார். இப்படியொரு உயர்வு கிடைத்திருக்காது. என் படத்தை பார்த்து, வீட்டிற்கு வந்து சொல்லாமல் ஆடியன்ஸ் இருக்கும் போதே என்ன படம் எடுத்து வெச்சிருக்கீங்க என்று கடிப்பாள் என்று தெரிவித்துள்ளார்.