ஒரே செவரு, ஒரே மேஜை, போட்டோ மட்டும் தான் மாறுது தளபதி, விஜய்யை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவரின் நடிப்பில் கடைசியாக வந்த லியோ, கோட் ஆகிய இரண்டு படங்களுமே ரூ 200 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்து சாதனை படைத்தது.
போட்டோ பரிதாபங்கள்
இந்நிலையில் விஜய் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார், இதனால் அரசியல் தலைவர்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்கிறார், பெருந்தலைவர்கள் நினைவு நாளுக்கு இரங்கல் தெரிவித்து முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார்.
தற்போது இவர் கடந்த சில நாட்களாக தன் வீட்டில் ஒரு மேஜை போட்டு தலைவர்கள் நினைவு நாளுக்கு மாழை போட்டு இரங்கல் தெரிவிக்கும் புகைப்படங்கள் செம ட்ரோல் ஆகி வருகிறது.
எல்லோருமே தங்களுக்கு தோன்றிய புகைப்படங்களை போட்டு அதை விஜய் இரங்கல் தெரிவிப்பது போல் கலாய்க்க, அதை விட விவேக் சாமி பட காமெடி காட்சியில் போலிஸிடம் 3 நம்பர் ப்ளேட் காட்டும் காட்சியை வைத்து விஜய்யை கிண்டல் செய்துள்ள மீம் வைரல் ஆகி வருகிறது, இதோ..