விஜய்யால் அவமானப்பட்ட அம்மா!! வெறுத்துப்போய் உண்மையை புலம்பிய ஷோபா..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் வாரிசு படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.
வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு படக்குழு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
தளபதி விஜய்யின் தாய் தந்தை எஸ் ஏ சி, ஷோபாவும் கலந்து கொண்டனர். ஏற்கனவே தாய் தந்தையை விஜய் கண்டுக்கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்து வந்தது. அதேபோல் நிகழ்ச்சியிலும் பெற்றோர்களை துளிக்கூட கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் வீடியோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் தன் மகன் பற்றிய எதுவும் எங்களுக்கு தெரியாது. தற்போது நடிக்கும் படம் மற்றும் அரசியல் போன்றவற்றை பற்றிக்கூட தெரியாது என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிக்கொடுத்து கூறியுள்ளார்.
இந்த விசயம் தற்போது இணையத்தில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவ்வளவு வெறுத்துட்டு புலம்பும் அளவிற்கு விஜய் பெற்றோர்களை கைவிட்டுவிட்டாரே என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பாவம் .,இந்த அம்மா வெறுத்துட்டாங்க போல, pic.twitter.com/NvrekA2iHv
— Satvik:THALA (@Satvik_AK_) December 26, 2022