என்ன Beep-க்கு கத்துறீங்க.. கடுப்பான விஜய் சேதுபதி! போட்டியாளர்களை வெளுத்து வாங்கிட்டாரு!
பிக்பாஸ்
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி ஒளிபரப்பும் ஒரு மாஸான ஷோ தான் பிக்பாஸ். முதல் சீசன் மக்களுக்கு சரியான அறிமுகம் இல்லை. ஆனால் சில நாட்களுக்கு பிறகு நிகழ்ச்சி சூடு பிடிக்க மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள்.
ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது 9வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் 8, 9வது சீசன்கள் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் ஆரம்பமானது, நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்களுக்குள் ஒரே சண்டை தான். இந்நிலையில், தற்போது வெளிவந்த ப்ரோமோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெளுத்து வாங்கிட்டாரு!
அதில், " நீங்கள் கத்துவதை பார்க்க எரிச்சலாக உள்ளது. கெட்ட வார்த்தையா பேசுறீங்க. எத்தனை பீப் தான் போடுவது என கலையரசனை தாக்கி பேசினார் விஜய் சேதுபதி.
"என்ன Beepக்கு பேசுறீங்க" என அவரையே நேரடியாக கேட்டுவிட்டார் விஜய் சேதுபதி.மற்றவர்கள் யாரும் அமைதியாக இருப்பதில்லை. அதனால் கத்துகிறேன் என பார்வதி கூற, நீங்க முதலில் அமைதியாக இருக்கீங்களா என கேட்டு நோஸ்கட் கொடுத்தார் விஜய் சேதுபதி.
இப்படி கத்திகொண்டே இருக்கும் நீங்கள் ஷோ பார்ப்பவர்களை துரத்திவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் எனவும் எல்லா போட்டியாளர்களையும் எச்சரித்தார் விஜய் சேதுபதி.
