எல்லாத்துக்கும் என்னை கூப்பிடுறாங்க.. விஜய் சேதுபதி கோபமாக எடுத்த முடிவு
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
தமிழ், தெலுங்கு தாண்டி அவர் ஜவான் படம் மூலமாக ஹிந்தியிலும் கால்பதித்துவிட்டார். மேலும் அவர் ஹீரோவாகவும் பல படங்கள் நடித்தாலும் அவை பெரிய அளவில் வசூல் ஈட்டுவதில்லை.
அதிர்ச்சி முடிவு
தான் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தோல்வி அடைவதால் அவர் தற்போது ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறாராம். இனி கெஸ்ட் ரோல் மற்றும் வில்லன் ரோலில் நடிப்பதில்லை என அவர் முடிவெடுத்து இருக்கிறாராம்.
மற்றவர்களுக்கு உதவி செய்ய கெஸ்ட் ரோலில் நடித்து கொடுக்கிறேன், ஆனால் எதற்கெடுத்தாலும் அவரை கூப்பிடுங்க என்பதை போல நிறைய பேர் வருகிறார்கள். அந்த மாதிரி படங்களால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்கள் பாதிக்கப்படுகிறது.
வில்லனாக நடிக்கவும் அதிகம் வாய்ப்புகள் வருகிறது. அதையும் நிறுத்திவிட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்து இருக்கிறார்.