விஜய் மகன் பெயரில் Fake ID.. ப்ளூ சட்டை மாறனை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Vijay Rashmika Mandanna Vamshi Paidipally Varisu jason sanjay
By Edward Aug 24, 2022 07:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது 66 வது படமாக வாரிசு ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் லீக்ஸ் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் பாதுகாப்பாக ஷூட் எடுங்கள் என்று கூறி வருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தன் பங்கிற்கு யாரும் வாரிசு படத்தின் லீக் புகைப்படங்களை பகிர வேண்டாம் என்று பகிர்ந்துள்ளார் என்று யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் விஜய் மகன் பெயரில் இருக்கும் டிவிட்டர் கணக்கு போலியானது என்றும் நீங்கள் இதை பேச வேண்டாம் என்றும் கூறி கலாய்த்து வருகிறார்கள்.

Gallery