வீட்டைவிட்டு சென்ற நிலா, சோழனிடம் சொன்ன அந்த வார்த்தை.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ
Tamil TV Serials
TV Program
By Bhavya
அய்யனார் துணை
விஜய் டிவியில் வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடராக உள்ளது அய்யனார் துணை.
4 அண்ணன்-தம்பிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் எதிர்ப்பாராத விதமாக என்ட்ரி கொடுக்கும் பெண்ணால் அவர்களது வாழ்க்கை எப்படி உள்ளது என்பதை கூறும் கதையாக இந்த தொடர் அமைந்துள்ளது.
பரபரப்பு புரொமோ
இந்த வாரம், சோழன் மது அருந்திவிட்டு நிலா பெட் பக்கத்தில் படுத்து அலப்பறை செய்ததால் வீட்டின் நிலைமை மாறிவிட்டது. சோழன் செய்த காரியத்தால் நிலா ஒரு Hostel பார்த்து அங்கே செல்ல முடிவு எடுத்து சென்று விட்டார்.
சோழன் நிலா Hostel சென்று மன்னிப்பு கேட்க அவர் கோபத்தில் இதுபோல் இனி செய்யாதீர்கள், உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோபமாக கூறிகிறார். இதோ அந்த பரபரப்பு புரொமோ,