பீரியட்ஸ் டைமிலும் உடலுறவுக்கு கட்டாயப்படுத்துவாரு!! Second Love பெண் போட்டியாளர் கண்ணீர்..

Ramya Krishnan Vijay Television Shrutika Relationship
By Jai Jul 28, 2026 06:59 AM GMT
Report

Second Love

நடிகை ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிகா தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியான செகண்ட் லவ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காதலில் தோல்வி, விவாகரத்து என பிரேக்கப் ஆனவர்கள், வாழ்க்கையில் மீண்டும் ஒரு துணையை தேட ஆண்கள், பெண்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

பீரியட்ஸ் டைமிலும் உடலுறவுக்கு கட்டாயப்படுத்துவாரு!! Second Love பெண் போட்டியாளர் கண்ணீர்.. | Vijay Tv Celebrity Cried On The Show Second Love

இந்நிகழ்ச்சி என்னதான் விமர்சனங்களை ஆரம்பத்தில் இருந்து பெற்று வந்தாலும், போட்டியாளர்கள் அனுபவித்த கஷ்டங்கள் பெரியளவில் பேசப்படுகிறது. சமீபத்திய எபிசோட்டில் ஒரு பெண் போட்டியாளர் பகிர்ந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

ஸ்ருதிகாவிடம் தன்னுடைய முதல் திருமண வாழ்க்கை குறித்து பெண் போட்டியாளர் கண்ணீர்விட்டபடி பகிர்ந்துள்ளார்.

பெண் போட்டியாளர்

அதாவது என் முன்னாள் திருமண வாழ்க்கையில் நான் அதிகமாக செக்ஸ் டார்ச்சர் அனுபவித்திருக்கிறேன்.

எனக்கு பீரியட்ஸ் இருந்தாலும்கூட, அவர் உடலுறவுக்கு கூப்பிடுவார். எனக்கு பீரியட்ஸ் உடல்நிலை சரியில்லை இந்த 4 நாட்கள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று சொன்னாலும் கேட்க மாட்டாரு.

அதனாலே அதை நினைச்சாலே எனக்கு பயமாகிவிட்டது. ஒரு கட்டத்தில் என் வாழ்க்கையை வெறுப்பதற்கும் அந்த செக்ஸ் டார்ச்சர் பெரிய காரணமாகிவிட்டது என்று கண்ணீருடன் பகிர்ந்துள்ளார் அந்த பெண் போட்டியாளர்.