அதே டெயிலர், அதே வாடகை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் போல “லட்சுமி மெஸ்”.. விஜய் டிவி புது சீரியல்

By Parthiban A Jun 02, 2026 02:26 PM GMT
Report

விஜய் டிவியில் அதிகம் ரசிகர்களை கொண்ட சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்ப கதை, கண்டிப்பான அப்பா, மூன்று மகன்கள் என பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் அதே பாணியில் ஒரு புது சீரியலை விஜய் டிவி தொடங்குகிறது. லட்சுமி மெஸ் என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடியே தான் மெயின் ரோலில் நடிக்கின்றனர்.

அதே டெயிலர், அதே வாடகை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் போல “லட்சுமி மெஸ்”.. விஜய் டிவி புது சீரியல் | Vijay Tv New Serial Lakshmi Mess Promo

ஹோட்டல் கதை

மெஸ் நடத்தும் குடும்பத்தினை பற்றிய கதை இது என்பது ப்ரோமோ பார்க்கும்போதே தெரிகிறது.

எல்லா கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் வகையில் தான் ப்ரோமோ இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் போலவே இந்த கதையும் இருக்கே என பலரும் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.