விஜய் சேதுபதியின் பிக் பாஸ் 8ல் விஜய் டிவி சீரியல் நடிகை.. யார் தெரியுமா
பிக் பாஸ் 8 நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. கமல் ஹாசனுக்கு பதிலாக இந்த 8வது சீசனை மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.
இதற்கு முன் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ரூ. 50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பிக் பாஸ் சீசன் 8ல் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. அதே போல் இன்னும் சிலருடைய பெயர்களும் அடிபட்டு வருகிறது.
அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்ன தொடும் ஆகிய சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை பவித்ரா ஜனனி பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வரப்போவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.