25 நாளா பனையூர் கேட் பூட்டு வெளியே போட்டுர்க்கா..? உள்ள போட்டிருக்கா? கரூணாஸ் ஆவேச பேச்சு..
Vijay
Gossip Today
Thamizhaga Vetri Kazhagam
By Edward
கரூர்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த கரூர் பிரச்சார பரப்புரை கூட்டத்தின் போது சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதுகுறித்து விஜய் மீது ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி உள்ளிட்ட பல கட்சியின் தலைவர்கள் கண்டனங்களை முன் வைத்து வருகிறார்கள். இதுகுறித்து மறைமுகமாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பனையூர் கேட் பூட்டு
அதில், பாஜக கம்போஸ் செய்த பாட்டுக்கு டான்ஸ் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார், விரைவில் பாடல் ரெடியாகும் என்று நினைக்கிறேன்.
பனையூர் கேட்-ன் பூட்டு வெளியே போட்டு இருக்கா? உள்ளே போட்டு இருக்கா? என்று நீங்க தான் பார்க்கணும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.