'உன்னை நினைத்து' பாடலில் விஜய்.. முழு வீடியோ! சூர்யாவுடன் compare பண்ணாதீங்க ப்ளீஸ்

Vijay
By Parthiban.A Jan 06, 2026 02:20 PM GMT
Report

சூர்யா, சினேகா, லைலா உள்ளிட்டோர் நடித்து 2002ல் வெளிவந்த படம் 'உன்னை நினைத்து'. விக்ரமன் இயக்கத்தில் உருவான அந்த படம் தற்போதும் ரசிகர்கள் ரசிக்கும் ஒரு படமாக இருந்து வருகிறது.

பணக்கார மாப்பிள்ளை வந்ததும் விட்டு சென்ற முதல் காதலி லைலா, அவரையே நினைத்து கொண்டிருக்கும் ஹீரோவை பின்னர் காதலிக்கும் சினேகா என காதல் தோல்வி கதையை வைத்து ரசிகர்களை கவர்ந்த படம் இது.

இதில் முதலில் சூர்யாவுக்கு பதில் ஹீரோவாக நடிகர் விஜய் தான் நடித்தார். இரண்டு பாடல்களிலும் அவர் நடித்தார். ஆனால் அதன் பிறகு வெளியேறியதால் அதில் சூர்யா நடித்தார்.

வீடியோ வெளியிட்ட விக்ரமன்

உன்னை நினைத்து படத்தில் வரும் சூப்பர்ஹிட் பாடலான 'என்னை தாலாட்டும் பொன்னுஞ்சல் நீயல்லவா' பாடலில் விஜய் நடித்து இருக்கும் வீடியோவை இயக்குனர் விக்ரமன் தற்போது வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை சூர்யா உடன் ஒப்பிடாதீர்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

"இந்த பாடலை தளபதி விஜய் அவர்களை வைத்து தான் முதலில் படமாக்கி இருந்தேன்..அந்த நினைவுகள் தோன்ற, அந்த பாடல் சம்மந்தமான பழைய video cassette ஒன்று கிடைத்தது..மிகவும் டேமேஜ் ஆகியிருந்த அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு post செய்கிறேன்... PLEASE DONT COMPARE this video with the existing video by Mr.Surya. Both are great performers" என விக்ரமன் பதிவிட்டு இருக்கிறார்.