மொத்த குடும்பத்தையும் கைகழுவி விட்டாரா விஜய்!! புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த SAC, ஷோபா..
லியோ படத்தின் வேலைக்கு மத்தியில் தன்னுடைய அடுத்த படமான தளபதி68 படத்திற்காக வேலையும் ஆரம்பித்துவிட்டார் நடிகர் விஜய்.
ஆனால் இதற்கிடையில் தன் குடும்பத்தினரை அப்படியே ஒதுக்கிவிட்டாரே என்று குற்றச்சாட்டு நெட்டிசன்கள் மற்றும் சினிமா விமர்சகர்களிடையே கேள்வி எழுப்பி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் தன் உடலில் சில பிரச்சனை என்றும் அதற்காக சர்ஜரி செய்துள்ளதாகவும் வீடியோ ஒன்றினை விஜய்யின் அப்பா இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
ஆனால் விஜய் இது குறித்து அப்பாவை நேரில் சென்று கூட பார்க்காமல் ஏன் அதைபற்றி கண்டும் காணாமல் இருக்கிறார்.
அமெரிக்காவிற்கு சென்ற போது தான் அப்பாவிற்கு சர்ஜரி நடந்தாலும் அதன்பின் கூட விஜய் சந்திக்காமல் இருப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
என்னதான் மன வருத்தம் இருந்தாலும் அப்பாவை இப்படியா விட்டுவிடுவது என்று கூறி பல விமர்சனங்கள் இணையத்தில் எழுந்துள்ளது.
ஆனால் அமெரிக்காவில் இருந்து வந்ததும் அப்பா அம்மா இருவரையும் பார்த்து சென்ற புகைப்படம் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.
