விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? இவரின் மகள் தான்
Vijay
By Parthiban.A
விஜய்
விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவருக்கு குழந்தைகள் கூட அதிகம் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்களை கவரும் வகையிலேயே விஜய்யின் நடிப்பு மற்றும் டான்ஸ் இருக்கும்.
தற்போது விஜய் ஒரு பெண் குழந்தையை கையில் வைத்து இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

யார் இந்த குழந்தை
அந்த குழந்தை வேறு யாரும் இல்லை.. நடிகர் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் நிஷா ஆகியோரின் மகள் சமைரா தான்.
மூன்று வயது மட்டுமே ஆகும் சமைரா மிகப்பெரிய விஜய் ரசிகையாம். விஜய் uncle-ஐ பார்த்ததும் அவள் ரொம்ப மகிழ்ச்சி ஆகிவிட்டதாக கணேஷ் வெங்கட்ராம் தெரிவித்து இருக்கிறார்.
