தைரியமா இரு விஜிமான்னு சொன்ன விஜய்!! நடிகை விஜயலட்சுமி எமோஷனல் டாக்...
விஜயலட்சுமி
நடிகர் விஜய் நடித்த ஃப்ரெண்ட்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை விஜயலட்சுமி. சமீபகாலமாக சினிமாக்களில் நடிக்காமல் இருக்கும் அவர் அடிக்கடி வீடியோகளை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்துவார். சமீபத்தில் முதலமைச்சராக இருக்கும் விஜய்யை பற்றி சில விஷயங்கள் பகிர்ந்துள்ளார்.
அதில், நான் இப்போதுதான் விஜய் அண்ணாவின் ஜனநாயகன் படத்தை பார்த்தேன், படத்தில் அவரின் நடிப்பு வழக்கம்போல் சூப்பராகவே இருந்தது. அதிலும் அவருடைய குழந்தையிடம் தைரியமா இரு விஜிமா என்று அண்ணன் சொல்லுவார். அதை கேட்கும்போது எனக்கே அவர் சொன்னது போல் இருந்தது.

எனக்கு இருக்கிற பிரச்சனை எல்லாருக்கும் தெரிந்திருக்கும், இந்நேரத்தில் அண்ணன் எனக்கு எங்கேயோ இருந்து ஆறுதல் சொன்னதுபோல் அக்காட்சி இருந்தது. அதேபோல் அவர் பெண்களுக்கு சப்போர்ட்டாகவும் இந்த படத்தில் நடித்திருந்தார். அதுவும் நல்லாவே இருந்தது.
அந்த படம் அவருடைய கட்சி படம் என்பதால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஃபிரன்ஸ் ப்டத்தில் நாங்க இருவரும் நடிக்கும்போது அண்ணனை போய் கூப்பிட்டு விடுவார்கள், விஜி என்ற பெயரை வைத்து அந்த சமயத்தில், நிறைய ஜாலியான சம்பவங்கள் நடந்தது என்று கூறியிருக்கிறார் விஜயலட்சுமி.
LATEST 🔔 : Actress #VijayaLakshmi About CM @TVKVijayHQ ! ❤️#JanaNayagan | #CMJosephVijay pic.twitter.com/F15dj4yGgm
— Prakash Vijay (@PrakazVijay_Of) August 25, 2026