5 நிமிட ரோலெக்ஸ் காட்சியால் உச்சம் தொட்ட சூர்யா!! இருமுறை அவமானப்படுத்திய சியான் விக்ரம்!!
தமிழ் சினிமாவில் தற்போதைய சிறந்த இயக்குனர்கள் என்ற லிஸ்ட்டில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் என்ற மாபெரும் படத்தினை கொடுத்தப்பின் நடிகர் விஜய்யின் 67வது படத்தின் கால்ஷீட்டிற்காக இந்நாள் வரை காத்திருந்தார்.
வாரிசு படம் வெளியானப்பின் சில நாட்களில் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்து பூஜைபோடப்பட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
விக்ரம் படத்தில் எப்படி பல வில்லன்களை நேர்த்தியாக கையாண்டாரோ, அதேபோல் தளபதி 67லும் பல பிளான்களை வைத்து திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த கதாபாத்திரத்தால் சூர்யாவின் மார்க்கெட் மிகப்பெரிய இடத்தினை கொடுத்தது.
இந்த ரோலை நடிகர் சியான் விக்ரமிடம் தான் முதலில் லோகேஷ் நடிக்க கேட்டிருந்தாராம். ஆனால், அது அவ்வளவாக ரோல் இல்லை என்று கூறி அனுப்பி வைத்துள்ளார் விக்ரம்.
அதன்பின் மீண்டும் தளபதி 67 படத்தில் 7 வில்லன்களில் ஒருவராக நடிக்க விக்ரமிடம் லோகேஷ் கேட்டிருக்கிறார். ஆனால் அதையும் வேண்டாம் என்று கூறி லோகேஷை நம்பாமல் அனுப்பி வைத்திருக்கிறார் சியான் விக்ரம். ஆனால் எப்படியாவது சியான் விக்ரமை இயக்கியே ஆகவேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் நினைத்துள்ளார். அப்படி விக்ரம் 2வில் எப்படியாவது நடிக்க உள்ள கொண்டு வர திட்டமிருக்கிறதாம்.