வாய்ப்புக்காக இயக்குனர் பாலா போட்ட கண்டிஷன்! அலறி ஓடிய நடிகை
இயக்குனர் பாலா எப்படிப்பட்ட இயக்குனர் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் எந்த எல்லைக்கும் செல்ல வேண்டி இருக்கும். நடிகர் நடிகைகளை அவர் அடித்து வேலை வாங்கும் வீடியோக்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள்.
பாலாவின் முதல் படமான சேது படம் விக்ரமுக்கு திருப்பு முனையாக அமைந்த படம். அதில் ஹீரோயினாக நடிக்க முதலில் பிரபல சீரியல் வில்லி நடிகை ஷில்பாவை தான் அனுகினாராம் பாலா.
ஆடிஷனுக்கு பின் பாலா அவரை நடிக்க வைக்க முடிவு செய்துவிட்டாராம், ஆனால் ஷூட்டிங் முடிய ஒரு வருடம் கூட ஆகலாம், அதுவரை சீரியல்களில் நடிக்க கூடாது என பாலா கண்டிஷன் போட்டிருக்கிறார்.
இதை கேட்டு அவர் இந்த படமே வேண்டாம் என சொல்லிவிட்டு போய்விட்டாராம். அந்த வாய்ப்பை மிஸ் செய்ததற்கு வருத்தம் எல்லாம் இல்லை என தற்போதும் சொல்கிறார் ஷில்பா. தான் சின்னத்திரையில் பல விதமான ரோல்களில் நடித்துவிட்டேன், அதுவே போதும் எனவும் கூறி இருக்கிறார்.