ஓவியாவுக்கு களவாணி விமல் அண்ணனா? அவரே கொடுத்த அதிர்ச்சி தகவல்...

Vimal Oviya Tamil Actress
By Edward Dec 28, 2024 03:30 PM GMT
Report

ஓவியா

நடிகை ஓவியா பிக்பாஸ்க்கு பின் நடிக்கிறார்களோ இல்லையோ அவரை பற்றி செய்திகள் இணையத்தில் கசியத்துவங்கி விடுகிறது. அப்படி சமீபத்தில் நடிகர் விமல், ஓவியா பற்றி கூறியது வைரலாகி வருகிறது.

ஓவியாவுக்கு களவாணி விமல் அண்ணனா? அவரே கொடுத்த அதிர்ச்சி தகவல்... | Vimal Selected For Oviyas Brother Role In Kalavani

களவாணி முதல் பாகத்தில் என்னை ஓவியாவுக்கு அண்ணன் ரோலில்தான் நடிக்க தேர்வு செய்ததாகவும் ஆனால் இயக்குநர் சற்குணம் சாருக்கு நான் கதாநாயகனாக செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருந்துள்ளது. அப்போது பசங்க படத்தில் நான் நடித்துக்கொண்டு இருந்தேன்.

பசங்க படம் வெளியாவதற்கு முன் களவாணி தயாரிப்பாளர்களில் ஒருவரான நஷீர் சாருக்கு பசங்க படத்தின் தயாரிப்பாளர் சசிக்குமார் என்னைப்பற்றி கூறியிருக்கிறார்.

அதன்பின் தான் நஷீர் சார் என்னை அழைத்து களவாணி படத்தின் கதாநாயகனாக நடிங்க என்று கூறியதாக விமல் தெரிவித்துள்ளார். ஓவியாவுக்கு அண்ணனாக நடிக்க வேண்டியவரா விமல்? என்று பலரும் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்துள்ளனர்.