ஸ்பாவில் மசாஜ் செய்வதற்கு முன் தாலியை கழற்றினேன்!! நடிகை வினோதினி வருத்தம்...
Tamil Actress
Actress
By Jai
வினோதினி
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வினோதினி. சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், ஸ்பா ஒன்றில் மசாஜ் செய்வதற்காக தாலி செயினை கழற்றிய வைத்தபோது மாயமானதாக தெரிவித்துள்ளார்.

மசாஜ் செய்வதற்கு முன்பு தன்னுடைய தாலியை கழற்றி அங்கிருந்த ஒரு டப்பாவில் வைத்ததாகவும், வீட்டிற்கு சென்று 2 நாட்கள் கழித்து நகை காணாமல் போனதை கவனித்ததாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து ஸ்பா நிர்வாகத்திடம் விசாரித்தபோது உரிய பதில் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளதாக வினோதினி தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்பாக்களுக்கு செல்லும்போது விலையுயர்ந்த நகைகளை அணிந்து செல்ல வேண்டாம் என்று பெண்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.