ரஜினி முதுகில் ஏறிய ராதிகா..லொக்கேஷன் ஸ்பாட்டில் நடந்த கூத்து!! பிரபல நடிகை...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பல பிரபலங்கள் அவருடன் நடித்த அனுபவங்கள், ரஜினியின் குணநலன்கள் குறித்து பகிர்ந்து கொள்வார்கள். அப்படி நடிகை புலியூர் சரோஜா அளித்த பேட்டியொன்றில் ரஜினிகாந்த் பற்றி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

புலியூர் சரோஜா
அதில், ரஜினியும், ராதிகாவும் ஆடிய போக்கிரிக்கு போக்கிரி ராஜா பாடல் ஷூட்டுக்காக லொக்கேஷனுக்கு சென்றிருந்தோம், அது பெரிய மலை.
அப்போது இயக்குநர் மூவ்மென்ட்-ஐ போட்டுக் காண்பிக்கச் சொன்னார். ரஜினி பெண்ட் செய்ய வேண்டும், அப்போது ராதிகா அவரது முதுகில் சிட்டுக்குருவி போல் தாவி குதித்து ஏற வேண்டும் என்றேன்.
உடனே இயக்குநர் என்னிடம், இங்கே நிற்பதற்கே கஷ்டமாக இருக்கிறது, இப்படி ஓர் ஸ்டெப்பை சொல்கிறாயே என்று கேட்டார்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுவிட்டு வந்த ரஜினி, என்ன அக்கா என்னாச்சு என்று கேட்டார். நான் விஷயத்தை சொன்னேன். உடனே அவர், அதெல்லாம் செஞ்சிடலாம் என்று கூறி டேக் போனார்.
நினைத்த மாதிரியே அவர்கள் ஆடினார்கள், எல்லோருமே கிளாப் அடித்துவிட்டோம் என்று புலியூர் சரோஜா தெரிவித்துள்ளார்.