கொலையில் முடிந்த குடிபோதை!! ரோகித் சர்மா ரசிகர்கை மட்டையால் அடித்தே கொன்ற விராட் ரசிகர்..
சினிமா நட்சத்திரங்களை தாண்டி கிரிக்கெட் வீரர்களுக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அப்படி கிரிக்கெட் மோகத்தால் தன் தலைவனை கிண்டல் செய்தால் இணையத்தில் அடித்துக்கொள்ளும் அளவிற்கு போர் நடத்துவார்கள் ரசிகர்கள்.
அப்படி இரு கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்கள் குடித்துவிட்டு ஆரம்பித்த வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.

அரியலூரை சேர்ந்த விக்னேஷ் மற்றும் தர்மராஜ் குடித்துவிட்டு கிரிக்கெட் பற்றி விளையாட்டாக ரோஹித், விராட் இருவரில் யார் பெஸ்ட் என்று வாய்வழியாக பேசி வந்தனர்.
அப்போது மும்பை இந்தியன்ஸ் ஆதரவாளராக இருந்த விக்னேஷ், ஆர்சிபி ஆதரவாளராக தர்மராஜ் என்பவரும் இருந்துள்ளனர். 24 வயதான விக்னேஷ் ஆர்சிபி மற்றும் விராட் கோலியை பற்றி கேலி செய்திருக்கிறார்.
மேலும் தர்மராஜின் உடலை வைத்து பாடி ஷேமிங் செய்துள்ளார். இதனால் கோப்பட்டுள்ள 21 வயதான தர்மராஜ் கையில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து விக்னேஷை தாக்கியிருக்கிறார்.
இதனால் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். உடனே தர்மராஜ் அங்கிருந்து தப்பி சென்ற விசயம் போலிசாருக்கு தெரியவர தர்மராஜை தேடி வருகிறார்கள்.
இப்படி கிரிக்கெட் மோகத்தால் ஒரு கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
