அஜித்திடம் வம்புக்கு வந்த நடிகர்! இருக்குற பிரச்சனை பத்தாதா
Ajith
valimai
Vishal
By Parthiban.A
அஜித்தின் வலிமை படம் பொங்கல் ரிலீஸ் ஆக வரும் ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஏகே ரசிகர்கள் படத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில் தற்போது திடீரென அரசு தியேட்டரில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி உள்ளது.
இந்த பிரச்சனை பத்தாது என தற்போது விஷாலின் வீரமே வாகை சூடும் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே 7ம் தேதி ரிலீஸ் ஆக இருந்த ஆர்ஆர்ஆர் படம் தள்ளிப்போனதால் வலிமைக்கு போட்டி இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது விஷால் களத்தில் குதித்து இருக்கிறார்.
வலிமைக்கு இருக்குற பிரச்சனை பத்தாது என இப்போது விஷாலும் போட்டிக்கு வந்திருப்பது அஜித் ரசிகர்களை சற்று டென்சன் ஆக்கி உள்ளது.