நிச்சயம் நின்னுபோனதால் என்னை பைத்தியம்ன்னு சொன்னாங்க!! ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் விஷால்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். செல்லமே படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, சண்டகோழி, திமிரு, தாமிரபரணி, அவர் இவன், பூஜை போன்ற மாஸ் படங்களால் வெற்றியை கண்டு வந்தார்.
இதனைதொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரியளவில் வெற்றியை தராமல் நஷ்டத்தை சந்தித்தது. இதற்கிடையில் நடிகை வரலட்சுமியுடன் காதலில் இருந்து பின் பிரேக்கப் ஆனதால் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அதன்பின் அனிஷா என்பவரை காதலித்து 2019ல் நிச்சயமும் செய்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக நிச்சயத்தோடு திருமணமும் நின்று போனது.
பின் ஆர்யாவுக்கு எப்போது திருமணமோ அப்போது தான் என் திருமணம் என்றும் நடிகர் சங்கம் கட்டிடம் எப்போது முடியுமோ அப்போது தான் என் திருமணம் என்றும் கூறி வந்தார்.
இதுகுறித்து லத்தி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு கொடுத்த பேட்டியில் நிச்சயம் நின்றுபோன கஷ்டத்தை பற்றி கூறியுள்ளார். 2019 என் வாழ்க்கையில் மோசமான ஆண்டு. நான் தனியாக பல விசயங்களை எனக்குள்ளே பேசிப்பேன்.
இதை பலர் பைத்தியம்ன்னு கூட சொன்னாங்க என்னை பார்த்து. எனக்கு ஒரு வில் பவர் என்னுடைய பலமும் பலவீனமாக இருக்கிறது. எதையும் நடத்திக்காட்ட வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது என விஷால் கூறியிருந்தார்.