விருது கிடைத்தால் அதை குப்பையில் வீசுவேன்!! நடிகர் விஷால்..
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால், விரைவில் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யவுள்ளார். சமீபத்தில் விஷால் அளித்த பேட்டியொன்றில் தனக்கு விருது கிடைத்தால் அதை குப்பையில் வீசுவிடுவேன் என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
அதில், எனக்கு விருதுகள் மீது நம்பிக்கையில்லை. 4 பேர் உட்கார்ந்து 7 கோடி பேருடன் பிடித்த படம், பிடித்த நடிகர், பிடித்த துணை நடிகர் என எப்படி திர்மானிக்க முடியும். இதை முடிவு செய்யும் இந்த 4 பேர் என்ன மேதாவிகளா?. மக்கள் கருத்துதான் முக்கியம்.
குப்பையில் வீசுவேன்
இவர்களே 8 பேர் அமர்ந்துகொண்டு முடிவு செய்வது எப்படி சரியாகும். எனக்கு விருதுகள் மீது சுத்தமாக நம்பிக்கையில்லை, எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக சொல்லவில்லை, பொதுவாகவே எனக்கு விருதுகள் மீது நம்பிக்கையில்லை.
ஒருவேளை எனக்கு விருது கொடுத்தால் போகிற வழியில் குப்பைத்தொட்டியில் வீசிவிடுவேன், அதில் தங்கம் இருந்தால் அதை அடகு வைத்து அந்த பணத்தை அன்னதானம் செய்துவிடுவேன். 8, 80 கோடி மக்களின் எண்ணத்தை எப்படி 8 பேர் கொண்ட குழு தீர்மானிக்க முடியும் என்று பேசியுள்ளார்.